பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் இலவசமாக பதிவு: அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைப்பு.

பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் இலவசமாக பதிவுசெய்யும் வகையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஆன்லைன் பதிவு தொடர்பான விவரங்களை மாணவர்கள் தொலைபேசி மூலமாகவும் அறிந்துகொள்ளலாம்.



பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுபொறியியல் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் மட்டும் பதிவுசெய்யும் புதிய முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. அரசு இ-சேவை மையங்களிலும் பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் பதிவுசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் இலவசமாகப் பதிவுசெய்ய சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் விடுமுறை நாட்கள் உட்பட தினமும் காலை 9 மணி முதல் இயங்கும். 

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.கணேசன் கூறியதாவது:பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் வசதிக்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையத்தை (Help Desk) அமைத்துள் ளோம். இங்கு 25 கணினிகள் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் மாண வர்களுக்கு உதவி செய்ய தேவையான பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ள னர். மேலும், ஆன்லைன் பதிவு தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் இந்த உதவி மையத்தை தொடர்புகொண்டு விவரம் பெறலாம். இதற்கான தொலைபேசி எண்கள்044-22358041 முதல் 44 வரை.பிளஸ்-2 முடிவு வெளிவந்த பின்னர் தேவை மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் இதர பகுதி களிலும் இதுபோன்ற உதவி மையங் களை தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம்.பொறியியல் படிப்புக்கு மாணவ, மாண விகள் ஆன்லைனில் ஆர்வமாக பதிவு செய்து வருகின்றனர். திங்கள்கிழமை காலை 11 மணி நிலவரப்படி, இதுவரை யில் 41 ஆயிரம் பேர் ஆன்லைனில் பதிவுசெய்துள்ளனர்.இவ்வாறு கணேசன் கூறினார்.புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி மையம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் கட்டிடத்தின் தரைத்தளத்தில் இயங்கு கிறது. இங்கு தினமும் காலை 9 மணி முதல் மாலை வரை ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம். ஆன்லைனில் பதிவு செய்யும் முறை தொடர்பான அனைத்து தகவல்களையும் இந்த உதவி மையத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

இதற்கிடையே, பொறியியல் படிப்பு, ஆன்லைன் விண்ணப்பம், கலந்தாய்வு தொடர்பான விவரங்களை கேட்டு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் உதவி செய்வதற்காக தகவல் மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள பணியாளர்கள் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்கள்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)