அரசின் நெருக்கடியால் மூடப்படும் சிறப்பு பள்ளிகள்.

வெளியூர் பஸ்களில், மாற்றுத் திறனாளிகள் சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய அரசு ஆணை உள்ளது.
ஆனால், மாநிலத்திற்குள் மட்டுமே பயணிக்க முடியும். பிற மாநிலங்களுக்கு செல்லும் பஸ்களில் சலுகை கட்டணத்தில் பயணிக்க அனுமதியில்லை.மாற்றுத்திறனாளிகளாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பாரா ஒலிம்பிக் கமிட்டி அலுவலகம் பெங்களூருவில் உள்ளது. அரசு பஸ்சில் பெங்களூரு சென்றால், ஓசூரில் இறக்கி விட்டு விடும் அவலம் உள்ளது.
 மீத கட்டணம் செலுத்த முன்வந்தாலும் ஏற்பதில்லை.அதே நேரத்தில், சென்னையில் இருந்து வேளாங்கண்ணி செல்ல, புதுச்சேரி வழியாக செல்ல வேண்டும். பிற மாநிலம் வழியாக என்றாலும் சலுகை கட்டணம் அனுமதிக்கப்படுகிறது. இதில், நிறைய பாகுபாடுகள் உள்ளதால், மாற்றுத்திறனாளிகள் திணறும் சூழல் உள்ளது.உத்தரவை செயல்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் ஆணையத்திற்கும் இது பற்றிய தெளிவு இல்லை. உயர் அதிகாரிகளும், மாற்றுத்திறனாளிகளை குழப்புகின்றனர்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ், அரசு அங்கீகாரம் பெற்ற, 254 சிறப்பு பள்ளிகள் உள்ளன. மன வளர்ச்சி குன்றியோருக்கு, அரசு ஒரு பள்ளியை மட்டுமே நடத்தி வருகிறது. மற்றவை, தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. அரசின் விதிமுறைகள் கிடுக்கிப்பிடி போடும் வகையில் உள்ளதால், இவற்றை நடத்த முடிவதில்லை.தனியார் பள்ளிகள் நடத்துவதற்கு உள்ள விதிமுறைகளே, சிறப்பு பள்ளிகளுக்கும் உள்ளன. 
இதற்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என, பல முறை, துணை செயலர் வரை சென்றும், அவர்கள் கண்டு கொள்ளவில்லை.இதனால், சிறப்பு பள்ளிகள், ஆங்காங்கே மூடப்பட்டு வருகின்றன. இதற்கு, அரசின் நெருக்கடிதான் முக்கிய காரணம். தொண்டு நிறுவனங்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தாலும், அனுமதி பெற பல மாதங்கள் அல்லாட வேண்டி உள்ளது.மாற்றுத்திறனாளிகள் மீது அக்கறை உள்ளது போல், அரசு சொன்னதெல்லாம் ஏமாற்று வேலை என்பது தான் உண்மை.அரசு வேலை வாய்ப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்று சதவீதஇடஒதுக்கீடு செய்வதோடு, தனியார் துறைகளிலும் இந்த இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். இதற்கான அரசாணை இருந்தும், அரசு துறைகளில் கூட, மூன்று சதவீத வேலைவாய்ப்பு தரப்படவில்லை

.காலி பணியிடங்கள் இருந்தும், அவற்றை நிரப்பாமல், மாற்றுத்திறனாளிகளை, அரசு ஏமாற்றி வருகிறது. அப்புறம் எப்படி தனியார் துறைகளில் வேலை வாய்ப்பை உறுதி செய்ய முடியும்?பொதுத்துறை வங்கிகளில், மாற்றுத் திறனாளிகள் சுயதொழில்துவங்க, 25 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், வங்கிகள் கிடுக்கிப்பிடி விதிமுறைகளை போட்டுஉள்ளதால், சுயதொழில்கடன் கூட பெற முடியாத நிலை உள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பல சலுகைகளை அறிவித்துள்ளதாக, தம்பட்டம் அடித்தாலும், அவை மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்துவதாக அமையவில்லை. அரசு, ஆசை காட்டி மோசம் செய்து விட்டது. இனி வரும் அரசாவது, மாற்றுத்திறனாளிகள் நலனின்அக்கறை செலுத்த வேண்டும்.
வீரமணி ,
பொது செயலர்,
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு சங்கம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)