பொறியியல் படிப்புக்கு இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் படிப்புக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அரசு இ-சேவை மையங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் வசதி செய்யப்பட்டிருப்பதாகஅண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 538 பொறியியல் கல்லூரிக
ள் உள்ளன. ஏற்கெனவேஅறிவிக்கப்பட்டபடி, பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு நாளிழ்களில் நேற்று வெளியிடப்பட்டது.
https://www.annauniv.edu/என்ற இணையதளத்திலும் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.பொறியியல் படிப்புக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தையும்ஆன்லைனிலேயே செலுத்திவிடலாம். அல்லது ஆன்லைன் விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை சேர்த்து அனுப்பும்போது, கட்டணத்துக்கான டிமாண்ட் டிராப்ட்டை இணைத்தும் செலுத்திக்கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணத்துக்கான டிமாண்ட் டிராப்ட் “The Secretary, Tamilnadu Engineering Admissions, Anna University” என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுக்கப்பட வேண்டும்.
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளிவந்து 7 நாட்கள் வரை ஆன்லைன் விண்ணப்பத்துக்கு பதிவுசெய்யலாம். பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் படிவம், தேவையான சான்றிதழ்கள் ஆகியவற்றை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு பிளஸ்-2 தேர்வு முடிவு வெளிவந்த 10 நாட்களுக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் மட்டும் பிரின்ட் அவுட் எடுத்த ஆன்லைன் விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலமாகவோ, கூரியர் மூலமாகவோ அனுப்பினால் ஏற்றுக்கொள்ளப்படாது.