சொந்த ஊர்களில் நுழைவுத் தேர்வு: டெல்லி பல்கலைக்கழகம் முடிவு!!
இனி சொந்த ஊர்களில் நுழைவுத் தேர்வுகளை நடத்த டெல்லி பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
நுழைவுத் தேர்வு தொடர்பாக 18 பேர் கொண்ட நிலைக்குழுழவை டெல்லி பல்கலைக்கழகம் அமைத்துள்ளது. இந்த நிலைக்குழுவை பல்கலைக்கழக துணைவேந்தர் உருவாக்கியுள்ளார்.
இந்த ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஜி. படிப்புகள் படிக்க விண்ணப்பித்தோருக்கு வசதியாக நுழைவுத் தேர்வுகள் அந்தந்த ஊர்களில் நடத்த இந்த நிலைக்குழு முடிவு செய்துள்ளது.
தொடக்கத்தில் டெல்லியைத் தவிர 5 மையங்களில் இந்தத் தேர்வுகள் நடத்தப்படும். இந்தத் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு மட்டுமே டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஜி. படிக்க இடம் கிடைக்கும். பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள 5 மையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும். டெல்லி பல்கலைக்கழகம் மொத்தம் 66 பி.ஜி. படிப்புகளை வழங்கி வருகிறது.
தற்போது நுழைவுத் தேர்வு விவகாரத்தால் மாணவர்கள் இந்த படிப்புகளுக்காக பதிவு செய்து தாமதமாகி வருகிறது.