பி.இ., ஆன்லைன் விண்ணப்பம் தொடரும் குழப்பத்தால் அவதி

அண்ணா பல்கலையின் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பிப்பு முறையில் கட்டணம் செலுத்தியதற்கான பதிவு விபரம் வரவில்லை என, மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


                அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 570 கல்லுாரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கென, www.annaunivnea2016.edu என்ற இணையதளம் மூலம், முதன் முறையாக ஆன்லைன் விண்ணப்பிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த, 15ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வரும் நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதல் நாள் இணையதளம் முடங்கியது. தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு, விண்ணப்பிப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு அண்ணா பல்கலையின் விசாரணை மையம் மூலம் தெளிவுபடுத்தப்பட்டும் வருகின்றன.இந்நிலையில், ஆன்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்தியும், அதற்கான பதிவு விபரம் கிடைக்காது குழப்பம் ஏற்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாணவர் ஜெயச்சந்திரன் கூறுகையில்,''நான் ஆன்லைனில் பணம் செலுத்தியும், பணம் செலுத்தியதற்கான பதிவுவிபரம் வரவில்லை. மேலும் இரண்டு முறை பணம் செலுத்தியும் இதே பிரச்னை காணப்படுகிறது. ஒரு விண்ணப்பத்துக்கு, 1,700 ரூபாய் செலுத்தியுள்ளேன்,'' என்றார்.
அண்ணா பல்கலை பதிவாளர் கணேசன் கூறுகையில்,
''எஸ்.பி.ஐ., உள்ளிட்ட சில வங்கிகளில் கட்டணம் செலுத்தினால், மும்பை சென்று பதிவாகிவர சற்று தாமதமாகாலம். மாணவர்கள் ஒரே முறை கட்டணம் செலுத்தினால் போதுமானது; மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டாம். ஒரு முறைக்குமேல் பணம் செலுத்தியவர்களுக்கு கட்டணத்தை திரும்பத்தர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)