முதுநிலை படிப்புக்கான 'டான் செட்' தேர்வு அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், முதுநிலை படிப்புகளில் சேர, ஜூன், 11ல், 'டான் செட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.


அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 550 இன்ஜி., கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். வரும் கல்வி ஆண்டில், முதுநிலை படிப்பில் சேர, ஜூன், 12ல், 'டான்செட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, ஜூன், 11ல் நுழைவுத் தேர்வு
நடக்கிறது.
இந்த தேர்வு எழுத விரும்புவோர், மே, 5 முதல் மே, 17 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம். அண்ணா பல்கலையின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, 500 ரூபாய்; தலித், அருந்ததியர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, 250 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)