பி.எஸ்சி. பயோடெக்னாலஜி படிப்பில் சேர விரும்புகிறேன். இது நல்ல படிப்புதானா?
21ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த துறை என சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கருதப்பட்ட பயோடெக்னாலஜி துறை இப்போது இதே உற்சாகத்தோடு பேசப்படவில்லை. ஐ.டி., ஐ.டி.இ.எஸ்., கால் சென்டர், பி.பி.ஓ. என ஐ.டி சார்ந்த பல புதிய பணிகள் உருவான பின்பு, பயோடெக்னாலஜி படிப்பை பலர் படிக்க விரு
ம்புவதும் குறைந்திருக்கிறது. பி.எஸ்சி. பயோடெக்னாலஜி முடிப்பவருக்கு தொடக்கத்தில் 8000 ரூபாய் தான் சம்பளமாகத் தரப்படுகிறது.
3 ஆண்டுகள் அனுபவம் பெற்றபின் இது 20,000 ரூபாயாக உயருகிறது. பயோடெக்னாலஜி போன்ற படிப்புகளில் பட்டப்படிப்பு மட்டும் படிப்பவருக்கு துறை சார்ந்த வாய்ப்புகளே இல்லை எனலாம். பட்ட மேற்படிப்பு, ஆய்வு என மேலே மேலே படிப்பவருக்குத் தான் நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. உங்களது சூழலை மனதில் கொண்டு நீங்கள் இதைப் படிப்பது குறித்து முடிவு செய்து கொள்ளலாம்.