வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெய்ல்- ஜிப் பைல் சேரிங் உட்பட புதிய வசதிகள்
பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் சமீப காலமாக தன்னுடைய பயனர்களுக்கு புதிய வசதிகளை வழங்கி வருகிறது. அண்மையில் பாதுகாப்பு அம்சமான ஒருவருடைய தகவலை வேறு யாரும் ஹேக் செய்து பார்க்க முடியாத வகையில் end-to-end encryption ஆப்சனை கொண்டு வந்தது.
இதைத் தொடர்ந்து பல்வேறு வசதிகளை வழங்கவுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்.இல். (IOS) கால் பேக் (call back) ஆப்சன் கொண்டுவரவுள்ளது. இதன் மூலம் வாட்ஸ் அப் செல்லாமலே மொபைல் போனில் இருந்து கால் செய்யலாம். அதேபோல் வாய்ஸ் மெய்ல் (voicemail), ஜிப் பைல் சேரிங் ஆப்சனை கொண்டுரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அனுப்பிய மற்றும் பெறப்பட்ட பி.டி.எப். பைல்களான Docs, Sheets மற்றும் Slides files உள்ளிட்டவற்றை ஜிப் பைலாக மாற்றி அனுப்பும் வசதியையும் கொடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.