ஆஸ்திரேலியாவில் படிக்க உதவித்தொகை!
முதுநிலை ஆராய்ச்சி படிப்பு அல்லது பிஎச்.டி.,யை ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள், ‘இன்டர்நேஷ்னல் போஸ்டு கிராஜுவேட் ரீசர்ச் ஸ்காலர்ஷிப் (ஐ.பி.ஆர்.எஸ்.,)’ எனும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!
இந்திய மாணவர்களுக்கு மட்டுமின்றி சர்வதேச மாணவர்களுக்கும் முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சியை ஊ
க்குவிக்கும் நோக்கில் இந்த உதவித்தொகை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையை வெல்வதன் மூலம் மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள முன்னணி ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பினையும் பெறுகின்றனர்.
தகுதிகள்
இந்த உதவித்தொகையின்கீழ், ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரியில் முழு நேரக்கல்வி முறையில் இரண்டு ஆண்டுகள் கொண்ட முதுநிலை ஆராய்ச்சி படிப்பு அல்லது மூன்று ஆண்டுகள் கொண்ட ஆராய்ச்சி (பிஎச்.டி.,) படிப்பில் சேர்க்கை பெற விண்ணப்பிக்கும் வேண்டும். பொதுவாக பல்கலைக்கழகம் எதிர்பார்க்கும் தகுதியை பெற்றிருத்தல் வேண்டும். இந்த உதவித்தொகையை பெறும் மாணவர்கள், ‘ஆஸ்திரேலிய போஸ்ட் கிராஜூவேட் அவார்டு’க்கு விண்ணப்பிக்கும் தகுதியையும் பெறுகின்றனர்.
அங்கீகரிக்கும் பல்கலைக்கழகங்கள்
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம், பாண்ட் பல்கலைக்கழகம், சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகம், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம், புதிய இங்கிலாந்து பல்கலைக்கழகம் (க்Nஉ), அடிலெய்டு பல்கலைக்கழகம், மெல்போர்ன் பல்கலைக்கழகம், கான்பரா பல்கலைக்கழகம், தென் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் விக்டோரியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் ஐ.பி.ஆர்.எஸ்., உதவித்தொகையை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.
உதவித்தொகை: கல்விக் கட்டணம், மருத்துவ செலவுகள் மற்றும் உடன் செல்பவரது (டிபடென்ஸ் ) மருத்துவ செலவுகளும் உள்ளடங்கும்.
உதவித்தொகை எண்ணிக்கை: 330
மேலும் விவரங்களுக்கு: www.studyinaustralia.gov.au மற்றும் www.education.gov.au