CHICKEN POX KIDS HEALTH | SUMMER DISEASE:
THANKS TO MR.DR.RAJMOHAN
நிறைய குழந்தைகளுக்கு சிக்கன்பாக்ஸ் பரவிக்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே தடுப்பூசி போடாத குழந்தைகளுக்கும் ,
ஏற்கனவே சிக்கன்பாக்ஸ் வராத குழந்தைகளுக்கும் வரும்
அதாவது ஒருமுறை வந்தால் மீண்டும் வருவதற்கு வாய்ப்பு மிகக்குறைவு .
எவ்வளவு நாள் இருக்கும் ?
5-10 நாட்கள் இருக்கும்
அறிகுறிகள் என்ன ?
தோலில் சிவந்த சிறு பொறி (rash) ஏற்பட்டு பின் அது நீர்நிறைந்த சிறு கொப்பளமாக மாறுவது என்பதே மிக முக்கியமான தெளிவான அறிகுறி
கொப்புளம் தோன்றுவதற்கு 2-3 நாட்கள் முன்பு வரும் அறிகுறிகள்
1. காய்ச்சல் -மிதமான முதல் கடுமையான
2.தலைவலி
3.பசியின்மை
4.அதிகப்படியான களைப்பு
பொறி(rash) மற்றும் கொப்புளங்கள் (blisters) முதலில் முகம்,கழுத்து,மார்பு,முதுகு போன்றவற்றில் வரும் .பிறகு உடலின் பிறபகுதிகளுக்கு பரவும். வாயின் உட்புறம்,கண்களின் இமை,பிறப்புறுப்பு போன்றவற்றிலும் காணப்படும் .
கொப்புளங்கள் உடைந்து காய்ந்து செதிலாக (scab) மாறுவதற்கு குறைந்தது ஒரு வாரமாகும்.
தடுப்பூசி உண்டா?
ஆம் .இருக்கிறது . 15 மாதத்தில் (ஒன்னேகால் வயதில்) ஒரு ஊசியும் 5 வது வயதில் ஊக்கத்தடுப்பூசி ஒன்றும் போட்டுக்கொள்ளவேண்டும்.
பெரிய குழந்தைகள்,பெரியவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் .
10,12 படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டின் துவக்கத்திலேயே இரண்டு தவணை ஊசிகளை ஒரு மாத இடைவெளியில் போட்டுவிட்டால் தேர்வு நேரங்களில் பயமின்றி இருக்கலாம் .
தடுப்பூசி போட்டாலும் சிக்கன்பாக்ஸ் வர வாய்ப்புண்டு , ஆனால் பாதிப்பு மிதமாகவே இருக்கும்.காய்ச்சல் அவ்வளவாக இருக்காது .மேலும் கொப்புளங்கள் குறைவாகவே இருக்கும் .
வந்தபிறகு மருத்துவம் உண்டா?
chickenpox அம்மை என்பது varicella zoster என்ற வைரசினால் வருவது; இறைநம்பிக்கைக்கும் இதற்கும் தொடர்பில்லை
சிக்கன்பாக்ஸ் ஒருமுறை வந்தால் மீண்டும் வர வாய்ப்பு மிக மிக குறைவு
முதலில் காய்ச்சல் வந்தபின் அம்மைக்கொப்புளங்கள் தோன்றும் .முதல் கொப்புளம் தெரிந்தவுடனே வைரஸ் எதிர்ப்பு மருந்தான ACYCLOVIR என்ற மருந்தை மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடவேண்டும்.இது மிகமுக்கியம். தாமதமாக ஆரம்பித்தால் பலனில்லை.
குழந்தைகளைவிட பெரியவர்களுக்கு இதன் பாதிப்பு அதிகமென்பதால் உடனே ஆரம்பிக்கவேண்டும்.
தினமும் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம் தப்பில்லை.கடைசி கொப்புளம் ஆறும்வரை கிருமிகள் மற்றவர்களுக்கு பரவவாய்ப்புண்டு.எனவெ கவனமுடன் இருக்கவும்.
அதிகமான அளவில் நீர் அருந்தவும்,பழச்சாறு,சூப் எடுத்துக்கொள்ளவும்.
உடலில் அரிப்பு பொதுவாக ஏற்படும்.அதற்கு calamine lotion பயன்படுத்தவும். காய்ச்சலுக்கு சாதாரண பாரசிட்டமால் மட்டும் பயன்படுத்தவும்.ஆஸ்ப்ரின் மாத்திரையை முற்றிலும் தவிர்க்கவும் .