ஸ்கூட்டர் ஓட்டும் பெண்களுக்கு டாப் 10 யோசனைகள்!

ஸ்கூட்டர் ஓட்டும் பெண்களுக்கு டாப் 10 யோசனைகள்!
1. பைக்கை/ஸ்கூட்டரை சென்டர் ஸ்டாண்ட் போட நிறையப் பேர் சிரமப்படுகிறீர்கள் என்பது என் கண்ணுக்கு கண்ணாடி மாதிரி அப்படியே தெரியுது . ஸ்டாண்டில் ஏறி நின்று முழு பல
த்தையும் காட்டி ஸ்டாண்டுக்கு செலவு வைக்காதீர்கள் . லேசாக அழுத்தம் கொடுத்தாலே போதும்; ஸ்கூட்டர் அதுவாகவே பின் பக்கம் சென்று ’ஜம்முனு’ உட்கார்ந்து கொள்ளும்.

2. ‘வெயிட்டான வண்டிகளை பார்க் பண்றது ரொம்பக் கஷ்டமா இருக்கு’ என்று ஃபீல் பண்ணும் பெண்கள், பைக்கை ரிவர்ஸ் எடுக்கும்போது, இடுப்பால் தாங்கிப் பிடித்தால் எவ்வளவு எடை இருந்தாலும் தெரியாது. ஹேண்ட் பாரை மட்டும் பிடித்து நகர்த்தினால்தான், பேலன்ஸ் கிடைக்காமல் கீழே விழுந்து அருகில் நிற்கும் வண்டிகள் சீட்டு கட்டு போல சரிந்து விழ வாய்ப்புண்டு.

3. எப்போதுமே சைடு மிரர் பார்க்காமல், இண்டிகேட்டர் போடாமல் திரும்பாதீர்கள்! திரும்பும் முன் சிக்னல் செய்வது மிக முக்கியம் பெண்களே.. அதேபோல் சடர்ன் பிரேக் போடாதீர்கள். இது உங்களுக்கும் ஆபத்து; பின்னால் வரும் அனைவருக்கும் பேராபத்து.

4. சாலையில் எப்போதுமே நடுவில் செல்ல வேண்டாம்; இதனால் பெரிய வாகனங்களை ஓட்டி வருபவர்கள் செம கடுப்பாக வாய்ப்புள்ளது. எப்போதும் பெரியவங்களைப் பகைச்சுக்கக் கூடாது ஓ.கே...

5. ஸ்கூட்டர் கீழே விழுந்தால், ஏர்லாக் ஆகிவிடும், உடனே ஸ்டார்ட் ஆகாது. அதனால், பதற்றப்படாமல், ஐந்து நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்து, முடிந்தால் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுவிட்டு ஸ்டார்ட் செய்து பாருங்கள். ஆல் வில் வெல்!

6. சாலையில் செல்லும்போது மற்ற வாகனங்களை ஒட்டியபடி ஓவர்டேக் செய்யாதீர்கள்; முக்கியமாக இடதுபுறம் டோன்ட் டேக் ஓவர்டேக்! ஓவர்டேக் உடம்புக்கு ஆகாது...

7. சிக்னல் வருவதற்கு ரொம்ப தூரம் முன்னரே கால்கள் இரண்டையும் அகல விரித்துக் கொண்டே வராதீர்கள்! காமெடியாக இருக்கும் என்பதையும் தாண்டி, கால்களை பின்னால் வரும் வண்டிகள் இடித்துவிடவும் வாய்ப்புள்ளது.

8. புடவைத் தலைப்பு, சுடிதார் ஷால் போன்றவற்றை மிகவும் கவனமாக X ஸ்டைலில் கழுத்தில் கட்டி விடுங்கள். சூப்பர்மேன், பேட்மேன்போல் பறக்க விட்டுக் கொண்டு செல்லாதீர்கள்.

9. காதில் ஹெட்போன் மாட்டுவதைத் தவிர்த்துவிட்டு, முன்னால் செல்லும் இரண்டு அல்லது மூன்று வாகனங்களை மட்டும் கவனம் வைத்து ஓட்டுங்கள். விபத்துக்கு வாய்ப்பே இல்லை. வீட்டுக்குப்போய்க்கூட பாட்டுக் கேட்கலாம்...

10. ரொம்ப முக்கியம் - ஹெல்மெட். உங்கள் அழகிய முகத்துக்கு ஸ்டைலான ஹெல்மெட் அநாவசியம்; வைஸர் கொண்ட ஃபுல்ஃபேஸ் ஹெல்மெட்தான் அவசியம் தோழிகளே!

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)