1079 பணியிடங்களுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணித் தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு.

2016-ஆம் ஆண்டுக்கான 1079 ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்திய குடிமை பணிகளுக்கான முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.


விளம்பர எண்.:08/2016-CSP


தேர்வு:UPSC Civil Service Examination-2016

மொத்த காலியிடங்கள்:1079 ( இதில் 34 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது)

வயதுவரம்பு:விண்ணப்பதாரர்கள் 01.08.2016 தேதியின்படி21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற்பட்ட வகுப்பினர் 33 வயதுக்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் ஏதாவதொரு துறையில் பட்டப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு அகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

முதல்நிலை தேர்வு மையங்கள்:தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி, திருச்சி, வேலூர்.

முதன்மை தேர்வு:ஒவ்வொரு மாநில தலைநகரங்களில் நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:ரூ.100. இதனை பாரத ஸ்டேட் வங்கியின்கிளைகளில் அல்லது ஆன்லைனில் முறையில் செலுத்தலாம். பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:27.05.2016

முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி:07.08.2016

முதன்மை தேர்வு நடைபெறும் தேதி:அக்டோபர், நவம்பர் - 2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in/exams/notifications/2016/CSP_IFS/CSP/CSP_2016_Engl_Notice.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)