110 வன அதிகாரி பணியிடங்களுக்கான பணித் தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு.


2016-ஆம் ஆண்டுக்கான 110 இந்திய வன அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.


விளம்பர எண்.: 09/2016-IFoS


தேர்வு:Indian Forest Service Examination-2016

மொத்த காலியிடங்கள்:110

வயதுவரம்பு:விண்ணப்பதாரர்கள் 01.08.2016 தேதியின்படி21 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற்பட்ட வகுப்பினர் 33 வயதுக்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் Animal Husbandry & VeterinaryScience,  Geology, Botany ,  Chemistry,  Mathematics,  Physics, Statistics, Zoology துறையில் பட்டப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு அகியவற்றில் பெறும் மதிப்பெண்கள்  அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

முதல்நிலை தேர்வு மையங்கள்:பெங்களூரு, திருவனந்தபுரம், சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி, திருச்சி, வேலூர். விசாகப்பட்டினம்.

விண்ணப்பக் கட்டணம்:ரூ.100. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் அல்லது ஆன்லைனில் முறையில் செலுத்தலாம். பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:27.05.2016

பாரத ஸ்டேட் வங்கியில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:26.05.2016

விண்ணப்பிக்கும் முறை:www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:27.05.2016

முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி:07.08.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in/exams/notifications/2016/CSP_IFS/IFS/IFS_P_2016_Notification_Engl.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)