மே 12ல் கோடை கால இலவச ஹாக்கி பயிற்சி


         ராமநாதபுரத்தில் 14 வயதிற்குட்பட்டோருக்கான கோடை கால இலவச ஹாக்கி பயிற்சி முகாம் மே 12ல் துவங்குகிறது. 


         ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மாநில தலைவர் செல்லத்துரை அப்துல்லா கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் 14 வயதிற்கு உட்பட ஆண்கள், பெண்களுக்கு மே 12 முதல் மே 28 வரை காலை 6 மணி, மாலை 4 மணிக்கு கோடை கால இலவச ஹாக்கி பயிற்சி அளிக்கப்படுகிறது. முகாமில் ஹாக்கி விளையாட்டின் அனைத்து நுட்பங்கள் சொல்லி தரப்படுகிறது.

        வேலுமாணிக்கம் சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நடக்கும் முகாமில் பங்கேற்க விரும்புவோர் 96551 81239 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022