விளையாட்டு பல்கலை பணி:15க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைகளில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஜூன், 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பல்கலை பதிவாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:பல்கலைக்கு, தேர்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் தொலைதுார கல்வி இயக்குனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு, விண்ணப்பிப்போர், 2016 ஜூலை, 16ன்படி, 45 - 55 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பங்களை, www.tnpesu.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 'பதிவாளர், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகம்' என்ற பெயருக்கு, ஜூன், 15க்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.-

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)