எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் இன்று முதல் வினியோகம் ஜூன் 20ல் முதல் கட்ட கலந்தாய்வு


          பொது நுழைவுத் தேர்வுக்கான சிக்கல் தீர்ந்ததால், தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. 


           'ஆன்லைன்' வழியேயான விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது.'மருத்துவப் படிப்புகளுக்கு, அகில இந்திய அளவில், பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், தமிழகத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் எழுந்தது. தமிழகம் உட்பட, பல மாநிலங்கள் எதிர்ப்பால், பொது நுழைவுத் தேர்வில் இருந்து, இந்த ஆண்டுக்கு விலக்கு அளிக்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.சிக்கல் தீர்ந்ததால், தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது.


இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் விமலா கூறியதாவது:எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.மாணவர், பெற்றோர் தேவையின்றி அச்சப்படத் தேவையில்லை. விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. தமிழகம் முழுவதும் உள்ள, 20 அரசு மருத்துவக் கல்லுாரிகள், சென்னை பல் மருத்துவக் கல்லுாரியிலும் விண்ணப்பம் வழங்கப்படும். ஜூன், 6 வரை விண்ணப்பங்கள் கிடைக்கும்.இது தவிர, www.tnhealth.org மற்றும், www.tn.gov.in என்ற இணையதளங்களில் இருந்தும், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன், 7க்குள் சமர்ப்பிக்க வேண்டும். தரவரிசை பட்டியல், ஜூன், 17ல் வெளியிடப்படும்.முதல் கட்ட கலந்தாய்வு ஜூன், 20ல் துவங்கி, 25ம் தேதி வரை நடக்கும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஜூலை, 18ல் நடக்கும்; ஆக., 1ல் வகுப்புகள் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

மொத்த இடங்கள் எத்தனை

* 20 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 2,650 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், 15 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு போக, 2,253 இடங்கள் மாநிலத்திற்கு கிடைக்கும். ஆறு சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, 760 இடங்களில், மாநிலஅரசுக்கு, 470 இடங்கள் கிடைக்கும். இரண்டும் சேர்ந்து, 2,723 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன


* அரசு பல் மருத்துவக் கல்லுாரியில் உள்ள, 100 பி.டி.எஸ்., இடங்களில், 85 இடங்களும்; 17 சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, 1,610 இடங்களில், 970 இடங்களும் மாநிலத்திற்கு கிடைக்கும். இந்த இடங்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022