பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை முன்னதாக வெளியிட்ட அரசு ஊழியர் பணியிடை நீக்கம்


பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே வெளியிட்ட அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த 17-ம் தே
தி காலை 10.31 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த முடிவுகளை, அரசு தேர்வுத்துறை மூலம் பத்திரிகைகளுக்கு வழங்கவும். அதேநேரத்தில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள்மூலம் எல்லா பள்ளிகளுக்கும் வழங்கப்பட்ட பிளஸ் 2 தேர்வுமுடிவு வெளியிடப்பட்டது.இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே,ஊடகங்களில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கசியத் தொடங்கியது.இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. விசாரணையில், கிருஷ்ணகிரியில் பணியாற்றும் அரசு ஊழியரானமாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் தான் பிளஸ் 2 முடிவுகளை கசிய விட்டார் என்பது தெரியவந்துள்ளது.

அதனையடுத்து, மகேந்திரன் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022