தமிழக அரசின் பயிற்சி மையத்தில் படித்து 42 பேர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி...!!
தமிழக அரசு நடத்தி வரும் குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து 42 பேர் ஐஏஎஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஐஏஎஸ் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும் என்ற நோ
க்கில் பயிற்சி மையத்தை தமிழக அரசு தொடங்கியது.
இந்த மையத்துக்கு தமிழக அரசு இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த மையத்தில் படித்து தான் 42 பேர் இறுதித் தேர்வில் தகுதி பெற்று ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.இதுகுறித்து தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மைத்தின் முதல்வர் எம். ரவிச்சந்திரன் கூறியது:2015-ஆம் ஆண்டு குடிமைப் பணிகளுக்கானத் தேர்வில் தமிழக அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 42 பேர்தேர்ச்சி பெற்று, ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இதில், அகில இந்திய அளவில் 7-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சரண்யா ஹரியும் தமிழக அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது என்றார். இந்த 42 பேரில் 30 பேர் பொறியியல் பட்டதாரிகள் ஆவர் என்றார் அவர்.