பி.எப்.அலுவலகங்களில் கேட்பாரற்று ரூ. 43 ஆயிரம் கோடி : மத்தியஅமைச்சர் தகவல்:
கேட்பாரற்று செயல்படாத கணக்கில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியாக ரூ. 43 ஆயிரம் கோடி உள்ளதாக பார்லி.யில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பார்லி. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடந்துவருகிறது. இதில் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு (பி.எப்.,) நிதி தொடர்பாக பார்லி. லோக்சபாவில் எழுப்பட்ட கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா பதில் அளித்து பேசியது,
நிறுவன அனுமதி தேவையில்லை
தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி கணக்குடன் ஆதார் அட்டை அல்லது வருமான வரி பான் நம்பரை (பான் கார்டு எண்) இணைத்திருக்கும் தொழிலாளர்கள், தங்களது பணத்தை கணக்கில் இருந்து எடுக்க தங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் ஒப்புதலுக்கு காத்திருக்க தேவையில்லை. அதற்கான புதிய வசதியும் செய்யப்பட்டுள்ளது
தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மேலும் சில பிரிவு பணியாளர்களையும் இணைக்கும் புதிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.