எல்லை காவல் படை 622 பணியிடங்களுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?


பி.எஸ்.எப். என அழைக்கப்படும் எல்லை காவல் படையில் காலியாக உள்ள 622 உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஹெட்கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணி:அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர் (ஆர்.எம்.)

காலியிடங்கள்:152

பணி:ஹெட்கான்ஸ்டபிள் (ஆர்.ஓ.)

காலியிடங்கள்:470

வயது வரம்பு:15.07.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.

தகுதிகள்:மெட்ரிக் தேர்ச்சியுடன், ரேடியோ மற்றும் டிவி தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:இரண்டு கட்ட எழுத்து தேர்வு மற்றும் உடல் அளவுத் தேர்வு, உடல்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்:ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:rectt.bsf.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:16.06.2016

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:15.07.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறியrectt.bsf.gov.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)