சுப்ரீம் கோர்ட்டிற்கு நான்கு நீதிபதிகள் புதிதாக நியமனம் !
சுப்ரீம் கோர்ட்டிற்கு நான்கு நீதிபதிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். டி.ஓய்.சந்திரசூட், அஜய் கான்வி்ல்கர், அசோக் பூஷன், நாகேஷ்வர் ராவ் ஆகிய நான்கு பேர் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதிகள் நியமன
ஆணையத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று நள்ளிரவு கையெழுத்திட்டார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு பேரும் நாளை(வெள்ளிக்கிழமை) பதவி ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்ட அமைச்சகத்தால் இதற்கான ஆணை நாளை வெளியிடப்படும்.
நான்கு நீதிபதிகளின் நியமனத்தை சட்ட மந்திரி சதானந்த கௌடா தனது டுவிட்டர் வலைதளத்தில் உறுதி செய்துள்ளார்.
தேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணைக்குழுச் சட்டம் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி நடைமுறை வந்தது முதல் செய்யப்படும் முதல் நீதிபதிகள் நியமனம் இது என்பது குறிப்பிடத்தக்கது...