இளம் வாக்காளரை ஓட்டு போட வைக்க'வை ராஜா மை - மிஸ்டு கால்' திட்டம் !
ஒரு கோடி இளம் வாக்காளர்களை, ஓட்டு போட வைக்க, 'வை ராஜா மை' என்ற, 'மிஸ்டு கால்' அழைப்பு நிகழ்ச்சி
துவக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை எட்ட, தேர்தல் கமிஷன் பல
விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டுள்ளது.
தேர்தல் கமிஷன் அனுமதியுடன், 'ஸ்மைல் சேட்டை' என்ற 'யூ டியூப்' வீடியோ பதிவேற்றத்தினர், 'வை ராஜா மை' என்ற பெயரில், 24 மணி நேர, 'மிஸ்டு கால்' சேவையை துவக்கி உள்ளனர்.
இது குறித்து, அதன் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் கூறியதாவது:
வாக்காளர் பட்டியலில், ஒரு கோடி இளம் வாக்காளர்கள் உள்ளனர். ஓட்டுப் பதிவில், இளம் வாக்காளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம். எனவே, இளம் வாக்காளர்களை ஓட்டு போட வைக்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளோம். இதற்காக ஓட்டு போட ஆர்வமுள்ள, இளம் வாக்காளர் கள், 78787 45566 என்ற மொபைல் எண்ணில், 'மிஸ்டு கால்' கொடுக்கும்படி கேட்டு வருகிறோம்.
இது குறித்து, சமூக வலைதளங்களில், 24 மணி நேரமும் பிரசாரம் மேற்கொண்டுள்ளோம். 'மிஸ்டு கால்' கொடுப்பவர்கள் நிச்சயம் ஓட்டும் போடுவர் என்ற நம்பிக்கை உள்ளது. மே, 2ம் தேதி துவங்கிய, இப்பணியில் இதுவரை 1.17 லட்சம் பேர், 'மிஸ்டு கால்' கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.