'டான்செட்' தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், முதுநிலை படிப்பில் சேர்வதற்கான, 'டான்செட்' தேர்வுக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.'டான்செட்' தேர்வுத்துறை செய
லர் மல்லிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., -எம்.டெக்., - எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான் பட்டப் படிப்புகளில் சேர, 'டான்செட்' தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வு, ஜூன், 11, 12ல் நடக்கிறது. விண்ணப்பங்கள், 'ஆன்லைனில்' பெறப்படும். ஆன்லைன் பதிவு தேதி, மே, 21, மாலை, 5:30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை, www.annauniv.edu/tancet2016 என்ற இணையதளத்தில் அறியலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)