இன்று முதல் 'அக்னி நட்சத்திரம்' ஆரம்பம்


                'அக்னி நட்சத்திரம் என்ற கடும் கோடை காலம், இன்று துவங்கி மே, 28ம் தேதி முடிகிறது. தமிழகம் முழுவதும் இயல்பை விட, 3 டிகிரி, 'செல்சியஸ்' வெப்பம் அதிகரிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், நேற்று கூறியதாவது: தமிழகத்தில், வெப்பசலனம் மூலம், மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான சூழல் தற்போது இல்லை. அடுத்த, இரண்டு நாட்களுக்கு ஈரப்பதம் குறைந்த வெப்ப காற்று வீசும் என கணிக்கப்பட்டு உள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் இயல்பை விட, 2 - 3 டிகிரி, 'செல்சியஸ்' வெப்பம் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)