கலை, அறிவியல் படிப்புகளுக்கு...அதிகரிக்கும் மவுசு
கலை, அறிவியல் படிப்புகளுக்கு...அதிகரிக்கும் மவுசு! வேலைவாய்ப்பால் மாணவர்கள் ஈர்ப்பு
வழக்கமாக, இன்ஜினியரிங், மருத்துவ படிப்புகளில் சேர மாணவர்கள் படையெடுக்கும் நிலையில், இந்தாண்டு கலை அறிவியல் பட்டப் படிப்பு களுக்கு மவுசு கூடியுள்ளது.பி
ளஸ் 2 முடித்த மாணவர்கள், கல்லுாரியில் சேர பொறியியல்பாடத்துக்கு முக்கியத்துவம் அளிப்பர். இன்னும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு முதலிடம் அளிப்பர்.
கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கலை அறிவியல் பாடங்களுக்குமுக்கியத்துவம் அளிப்பதில்லை. சிலர் வேளாண் படிப்புகளில் சேருகின்றனர்.தொழில்முறை படிப்புகளுக்கு இடம் கிடைக்காவிட்டால், கலைஅறிவியல் படிப்புகளை தேடிச் செல்லும் நிலை உள்ளது. ஆனால், இந்தாண்டு, வழக்கத்தை விட அதிகமாக, கலை அறிவியல் படிப்புக்கு மவுசு கூடியுள்ளது.
இது குறித்து கல்வியாளர்கள் கூறுகையில், 'மத்திய, மாநில அரசு பணி, ஆசிரியர் பணி, வங்கி, தனியார் நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என, அதிக வேலைவாய்ப்பு கருதி, இந்த ஆண்டு மாணவர்கள், கணிசமான அளவு கலை அறிவியல் பட்டப்படிப்புகளை தேர்வு செய்துள்ளனர்.'குறிப்பாக, பி.காம்., டிகிரியில், சி.ஏ., பி.ஏ., பி.ஐ., என பல பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, 10 பிரிவுகள் உள்ளன.மேலும், பி.எஸ்.சி., பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, பி.எஸ்சி., இயற்பியல், கணிதம், விஸ்காம் என பல பிரிவுகளில் சேர்ந்துள்ளனர். பி.எஸ்சி.,க்கு (விவசாயம்),அதிக அளவில் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.'கலை அறிவியல் கல்லுாரிகளில் கடந்த ஆண்டை விட,20 சதவீதம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். வேலைவாய்ப்புக்கு பல்வேறு போட்டி தேர்வுகள் எழுத கலை அறிவியல் படிப்புகள் உதவியாக இருக்கும் என்பதாலும், இப்படிப்புக்கு மவுசு அதிகரித்துள்ளது' என்றனர்.
பல்கலையில் வரலாறு துறை துவக்கம்
பாரதியார் பல்கலையில் இக்கல்வியாண்டு முதல் முதுகலை படிப்புக்கு வரலாறு மற்றும் சுற்றுலாவியல் துறை புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இப்படிப்பில் சேர்க்கை புரிய மாணவர்கள், www.bu.ac.in என்ற பல்கலை இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து,அல்லது பல்கலையில் நேரடியாக பெற்றும் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்திசெய்த விண்ணப்பங்களை, ஜூன், 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும். பல்கலையில் அண்ணா ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் மற்றும் பல்கலை இணைந்து ஆட்சிப்பணி தேர்வுக்கு பயிற்சி அளித்து வரும் நிலையில், இத்துறை மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் சேர முக்கியத்துவம் வழங்கப்படும் என, துணைவேந்தர் கணபதி தெரிவித்துள்ளார். சேர்க்கை விபரங்களுக்கு, 98420 98696 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.