இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் என்ஜினீயர்,விஞ்ஞானி பணியிடங்கள்.!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) என்ஜினீயர்,விஞ்ஞானி பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்க
ளுக்கு மே25-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.மொத்தம் 375 விஞ்ஞானி,என்ஜினீயர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியில் சேர பி.இ.,அல்லது பி.டெக் அல்லது அதற்கு ஈ டான படிப்பை படித்திருக்கவேண்டும். மேலும்65சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். வயது35-க்கு மிகாமல் இருக்கவேண்டும். ஊதியமாக ரூ.15,600முதல் ரூ.39,100பிளஸ் ரூ.5,400என்ற அடிப்படையில் தரப்படும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100வசூலிக்கப்படும். பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மட்டுமே கட்டணம் பெறப்படும். பெண்கள் மற்றும் இதர பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. 

இந்த வேலையில் ஆன்-லைனில் விண்ணப்பங்களை மே25-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை3-ம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு http://www.isro.gov.in/careers என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)