"பார்வையற்றோர் யுபிஎஸ்சி தேர்வு எழுத உதவியாளரை பயன்படுத்தலாம்!'


        பார்வையற்றோர்கள், உடல் இயக்கக் குறைபாடுள்ளவர்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் உதவியாளரின் துணைக் கொண்டு மத்தியத் தேர்வாணையத் தேர்வுகளில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்து
ள்ளது.


குடிமைப் பணித் தேர்வுகளான இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்) மற்றும் இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்டவற்றை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்துகிறது.முதல் நிலை, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய3 நிலைகளாக இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வை ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.இதுகுறித்து மத்தியப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுவாக, இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்கள் கைப்பட தேர்வை எழுத வேண்டும் என்பது விதிமுறையாகும். 

இந்நிலையில், தசை மற்றும் மூட்டுகளின் இயக்கக் குறைபாடுள்ளவர்கள், கண்பார்வையற்றவர்கள், உடல் இயக்கக் குறைபாடுள்ளவர்கள் ஆகியோர் தங்கள் கைப்படத் தேர்வு எழுத இயலாத சூழ்நிலை இருப்பதால், அவர்கள் உதவியாளரைக்கொண்டு முதல் நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளை எழுதலாம்.இத்தகையவர்கள் தேர்வு எழுதுவதற்கு ஒரு மணிநேரத்துக்கு 20 நிமிடங்கள் வீதம் கூடுதலாக நேரம் வழங்கப்படும் என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank