இணைய சேவை மையங்கள் இன்று இயங்கும்


அரசு இணைய சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 29) இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தமிழக அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியர்- வட்டாட்சியர்- மாநகராட்சி- மண்டல அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் அரசு இணைய சேவை மையங்கள் காலை 9.45 முதல் மாலை 5.45 மணி வரை செயல்படுகின்றன.

இவற்றில் அரசு நலத் திட்ட உதவிகள், சான்றிதழ்கள் கோரி பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.

பள்ளித் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், மாணவ-மாணவிகள் பல்வேறு சான்றிதழ்களைப் பெறுவதற்காக அதிக அளவில் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.

எனவே, மக்களின் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல இயங்கும் என அரசு கேபிள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெ.குமரகுருபரன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)