நுழைவுத்தேர்வை நிறுத்திவைக்க சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக ஜனாதிபதியை சந்தித்து விளக்கம்

மருத்துவ நுழைவுத்தேர்வை நிறுத்திவைக்க அவசரசட்டம்: மத்திய மந்திரி ஜே.பி.நட்டா ஜனாதிபதியை சந்தித்து விளக்கம்.
மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை ஒரு வருடத்துக்கு நிறுத்திவைக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மத்திய மந்திரி ஜே.பி.நட்டா சந்தித்து உரிய விளக்கங்களை அளித்தார்.

பொது நுழைவுத்தேர்வு


நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு ‘நீட்’ எனும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு மூலம் தான் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி கடந்த 1-ந் தேதி நடந்த நுழைவுத்தேர்வை சுமார் 6½ லட்சம் மாணவர்கள் எழுதினர். ஜூலை 24-ந் தேதி 2-வது கட்ட நுழைவுத்தேர்வு நடக்க உள்ளது.பொது நுழைவுத்தேர்வு கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும் என்று கருத்து எழுந்துள்ளது. நகர்ப்புற மாணவர்கள் மற்றும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவர்களுடன் அவர்கள் போட்டிபோட முடியாது என்பதால் நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

அவசர சட்டம்

இந்த ஆண்டு மட்டுமாவது பொது நுழைவுத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.இதையடுத்து மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்து, இந்த ஆண்டு மட்டும் மாநில கல்வி வாரியத்தின் கீழ் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு, மாநில அரசு நடத்திவரும் மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகளில் பொது நுழைவுத்தேர்வு இன்றி மாணவர் சேர்க்கையை நடத்த முடிவு செய்தது. இந்த அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை கடந்த வெள்ளிக்கிழமைஒப்புதல் அளித்தது.ஜனாதிபதி கேள்விஅந்த அவசர சட்டம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் உடனே ஒப்புதல் அளித்துவிடாமல், இதுதொடர்பாக சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டுள்ளார்.அதோடு, இந்த அவசர சட்டத்துக்கு என்ன அவசியம் வந்தது என்று விளக்கம் அளிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடமும் அவர் கேட்டார்.

மந்திரி நேரில் விளக்கம்

இதையடுத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா நேற்று நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது ஜே.பி.நட்டா மாநில வாரியான கல்வித்திட்டங்கள் உள்பட பல்வேறு விளக்கங்களை அளித்தார்.ஆனாலும் மேலும் சில விளக்கங்களை ஜனாதிபதி சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் கேட்டதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சீனா புறப்பட்டு செல்ல இருப்பதால், ஜனாதிபதி கேட்ட விளக் கங்களை அனுப்ப அமைச்சக அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர்.மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்த அவசர சட்டம், அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கெஜ்ரிவால் கடிதம்

தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மாநில அரசு ஒதுக்கீட்டு (கோட்டா) இடங்களுக்கு மட்டுமே மத்திய அரசு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ள அவசர சட்டத்தில் விலக்கு கோரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இதற்கிடையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கக்கூடாது என்று ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank