புதன்கோள் சூரியனின் விட்டம் கடக்கும் நிகழ்வு

புதன்கோள் சூரியனின் விட்டம் கடக்கும் நிகழ்வு: 45 ஆண்டுகளுக்குப் பின் இன்று வானில் நடக்கிறது.
சூரியன், புதன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ வானியல் நிகழ்வு திங்கள்கிழமை  (மே- 9) நடை
பெறுகிறது. இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச்செயலர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் தெரிவித்த தகவல்,  சூரியன், புதன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ வானியல் நிகழ்வு  இதற்கு முன் 1970 -ல்  நடைபெற்றது.

அடுத்த நிகழ்வு 2095 ல் நடைபெறவுள்ளது.  சூரியன், புதன் பூமி ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வை புதன் இடைமறிப்பு என்றும் கூறலாம்.  புதன் கோள் சூரியனுக்கு அருகில் இருப்பதாலும், வெகு வேகமாகச் சுற்றுவதாலும், புதன் மறைப்பு என்பது, வெள்ளிக்கோள் மறைப்பை விட அடிக்கடி நிகழும். புதன்கோள் மறைப்பின் போது புதன் சூரிய முகத்தில் அப்படியே நழுவி, நகர்ந்து செல்வது தெரியும். ஆனாலும், சின்ன சூரிய மச்சம் போல் தெரியும். குட்டி  புதனை,  சரியான கருவிகள் கொண்டு பெரிது படுத்திப் பார்த்தால், நகர்வு  இன்னும் சிறப்பாக இருக்கும். புதன் இடைமறிப்பு ஒரு  நூற்றாண்டில்  13-14 முறை நிகழ்கிறது.அடுத்த புதன் இடைமறிப்பு, 2019 நவம்பர் 11 -ல்  நடக்கவுள்ளது. ஆனால் நாம் அதைப் பார்க்க முடியாது.  வட அமெரிக்காவில் தெரியும். அதன் பின்னர் அமெரிக்கர்கள் அடுத்த  புதன் கோள் இடைமறைப்பைக்காண   2049 -ஆம் ஆண்டு வரைக் காத்திருக்க வேண்டும்.

இந்த அதிசய நிகழ்வைப்பார்ப்பது எப்படி.. இந்தியாவில் மே. 9 -ஆம் தேதி மாலை 4.40 மணி முதல்  6.30 மணி வரை பார்க்கலாம். புதன் கோள் இடை மறிப்பு நிகழ்வை வெறும் கண்ணால் பார்க்க கூடாது. டெலஸ்கோப் ,ஊசித்துளை கேமிரா, சூரிய ஒளி பிம்பம் எதிரொளிப்பு மூலம் பிம்பத்தை திரையிட்டு காணலாம். பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட கண்ணாடிகள், வெல்டிங்கிளாஸ் எண் 14 மூலமாகவும் இந்நிகழ்வைப் பார்க்கலாம்.ஆனாலும் நீண்ட நேரம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.வதந்திகளை நம்ப வேண்டாம்...புதன் கோள் இடைமறிப்பு நிகழ்வு என்பது இயற்கையான ஒரு வான் நிகழ்வு ஆகும்.

இந்த நிகழ்வால் எந்த இயற்கை மாற்றமும் நிகழப் போவதில்லை. இதற்கான சிறப்பு பூஜைகள் தேவையில்லை. இதற்கும் மனித வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை.வழக்கம் போல்  நமது பணிகளைச் செய்யலாம். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டை கலீப்நகர்டிவிஎஸ் அப்பார்ட்மெண்டில் திங்கள்கிழமை மாலை 4.40 மணிக்கு இந்நிகழ்வைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)