பதற்றமான ஓட்டுச்சாவடியில் அரசியல் பேசினால் 'அலாரம்'
பதற்றமான ஓட்டுச்சாவடிக்குள் தேவையின்றி பேசிக்கொண்டிருந்தால், கட்டுப்பாட்டு அறைக்கு, 'அலாரம்' வாயிலாக தெரிவிக்கும் புதிய தொழில்நுட்பம், வ
ரும் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில், பதற்றமான ஓட்டுச் சாவடிகளை, வழக்கம்போல், 'வெப் கேமரா' மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சொந்தமாக 'லேப்-டாப்' வைத்துள்ள, கல்லுாரி மாணவ, மாணவியர், இளைஞர்கள், இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வழக்கமாக, 'வீடியோ' பதிவு மூலம், ஓட்டுச்சாவடி கண்காணிக்கப்படும். தற்போது, ஓட்டுச்சாவடிக்குள் தேவையின்றி அரசியல் பேசுவதை, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கவும், 'வெப் கேமரா' வாயிலாக சிறப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது.
தேவையின்றி பேச்சுகள் எழும்போது, மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கும், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலரின் மொபைல் போனுக்கும், 'அலாரம்' அடிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.