ஓட்டுப்பதிவிற்கு மாற்று ஆவணங்களின் பட்டியல்

ஓட்டுப்பதிவிற்கு மாற்று ஆவணங்களின் பட்டியல்... வெளிநாடு வாழ் வாக்காளருக்கு பாஸ்போர்ட் கட்டாயம்

புதுச்சேரி:வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டையை ஓட்டுச் சாவடியில் காண்பிக்க இயலாதவர்கள், புகைப்படம் உள்ள ௧௧ ஆவணங்களில் ஒன்றை தங்களின் அடையாளத்தை நிரூபிக்க
பயன்படுத்தலாம்' என்று தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு கூறியுள்ளார்.

ஓட்டுச்சாவடிக்கு எந்தெந்த ஆவணங்களை கொண்டு செல்லலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு கூறியிருப்பதாவது:

வாக்காளர் ஆள் மாறாட்டத்தை தடுக்கவும், வாக்காளர் கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்கவும், ஓட்டளிக்க செல்லும் போது, தங்கள் புகைப்பட அட்டையை காண்பிக்க வேண்டும்.

அவ்வாறு காண்பிக்க தவறுதல் அல்லது மறுத்தல் அவர் கள் வாக்களிப்பதை மறுக்கும் நிலைக்கு இட்டு செல்லும்.

எனவே, ஓட்டளிக்க வாக்களர் பட்டியலில் பெயர் இருப்பதும், புகைப்பட அடையாள அட்டையை வைத்திருப்பதும் அவசியம். இதன்படி புதுச்சேரியில் பதிவு செய்திருந்த அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்பட வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது.தற்போது அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட வாக்காளர் சீட்டு அளிக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

அவ்வாறு செய்ய இயலாதவர்கள் மாற்றாக புகைப்படம் உள்ள பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசு சார் பொது நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் இவற்றால் அளிக்கப்பட்ட புகைப்படம் உள்ள பணியிட அடையாள அட்டைகள். வங்கி, அஞ்சல் அலுவலகத்தால் அளிக்கப்பட்ட புகைப்படம் உள்ள கணக்கு புத்தகங்கள் ஆகியவற்றை அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்.

மேலும், பான் கார்டு, என்.பி.ஆரின் கீழ் ஆர்.ஜி.ஐ.,யினால் அளிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, எம்.என்.ஆன்.இ.ஜி.ஏ. பணிநிலை அட்டை, தொழிலாளர் நலத்துறையின் திட்டத்தில் அளிக்கப்பட்ட நலவாழ்வு காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படம் உள்ள ஓய்வூதிய ஆவணம், தேர்தல் நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட ஓட்டுச்சீட்டு, பாராளுமன்ற, சட்டசபை, சட்ட மேலவை உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட அலுவல் அடையாள அட்டைகள் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

வாக்காளரின் அடையாளம், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை மூலம் நிறுவப்பட்டால் அதிலுள்ள எழுத்து பிழைகள் போன்றவை புறக்கணிக்கப்படலாம். மேலும் மற்றொரு தொகுதி யின் வாக்காளர் பதிவு அதிகாரியால் அளிக்கப்பட்ட புகைப்பட வாக்காளர் அட்டை காண்பிக்கப்பட்டால் அவ்வாக்காளர் ஓட்டுளிக்க வரும் போது ஓட்டுச்சாவடிக்கு தொடர்புடைய வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர் இருக்கும் பட்சத்தில் அவ்வகையான புகைப்பட அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

புகைப்படம் ஒற்றுமையில்லாத சூழலில் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க இயலாவிட்டால் மேற்கண்ட மாற்று ஆவணங்களில் ஒன்றை வாக்காளர் காண்பிக்க வேண்டும்.மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (20 ஏ)ன் படி பாஸ்போர்ட்டின் அடிப்படையில் வாக்காளராக பதிவு செய்துள்ள வெளிநாடு வாழ் வாக்காளர்கள் தங்களுடைய ஒரிஜினல் பாஸ்போர்ட்டுடன் மட்டுமே அடையாளம் காணப்படுவர். வேறு எந்தவித அடையாள ஆவணங்களும் ஏற்றுக் கொள்ளப்படாது

இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank