'தனியார் கல்லூரிக்கான கட்டணங்களை நிர்ணயிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது'


            'தொழில்முறை கல்வி அளிக்கும் தனியார் கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கை மற்றும் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க, முறைப்படுத்த, மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துஉள்ளது.


           மத்தியப் பிரதேச மாநிலத் தில், தனியார் கல்லுாரிகளில் முதுகலை பட்டப் படிப்புகளுக்கு கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் அளித்து சட்டம்இயற்றப்பட்டது. 


கல்விச் சேவை

இதை எதிர்த்து, பல்வேறு தனியார் கல்லுாரிகள், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு, நீதிபதிகள், ஏ.ஆர்.தவே, ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அமர்வு அளித்த தீர்ப்பு:பொருளாதார சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டபோது, கல்வித்துறையில் தனியார் ஈடுபட, அரசு அனுமதி அளித்தது. கல்வித் துறையில், தனியாரின் பங்களிப்பு லாபத்தை ஈட்டுவதாக இல்லாமல், கல்வி சேவையாக இருக்கும் என்ற நோக்கத்திலேயே இந்த அனுமதி அளிக்கப்பட்டது.ஆனால், தற்போது கல்வியானது, தனியாரின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது; லாபம் ஈட்டும் ஒரு தொழிலாக மாறிவிட்டது. கல்வி என்பது லாபம் ஈட்டுவதாகஅல்லாமல், சமூக நலனுக்கானதாக இருக்க வேண்டும்.தனியார் கல்வி நிறுவனத்தை அமைப்பது, அதை நிர்வகிப்பது, கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு அளிக்கப்பட்டுள்ள உரிமை முழுமையானதல்ல; அதுகட்டுப்பாட்டுக்கு உட்பட்டது.கல்வி நிறுவனங்கள் வர்த்தகமயமாவதை சகித்து கொள்ள முடியாது. இவற்றைக் கட்டுப்படுத்த, குறிப்பாக தொழில்கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதில் அரசுக்கு முக்கிய பங்கு உள்ளது.காப்பீடு, மின்சாரம், தொலைத் தொடர்பு போன்ற துறைகளில், கட்டணங்களை ஒழுங்குபடுத்த, ஒழுங்குமுறை ஆணையம்உள்ளது. அதுபோல், நாட்டின் நலன் கருதி, அனைத்து தனியார் தொழில்களிலும் இதுபோன்ற ஒழுங்குமுறை ஆணையங்கள் அமைக்கப்பட வேண்டியதுஅவசியமாகிறது. 

குறிப்பாக கல்வித் துறையில் இது மிகவும் அவசியமாகும்.உரிமை உண்டுதொழில்முறை கல்வியில் உள்ள தனியார் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை, கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. அவை முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு தனது தீர்ப்பில் கூறிஉள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)