கிரடிட், டெபிட் கார்டு மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு சேவை கட்டணம் ரத்து.
கிரடிட் மற்றும் டெபிட்கார்டு மூலம் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கான சேவைக் கட்டணம்ஜூன் 1-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கிட மத்திய ரயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்து வருகிறது.
ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய ஏராளமான பயணிகள் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின் றனர். இதற்கு சேவை கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு இந்த சேவை கட்டணத்தை ரத்து செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது.
அதன்படி ஜூன் 1 முதல், சேவை கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இந்த புதிய சலுகையால் மக்கள் பயன்பெறுவதுடன், நிர்வாகத்தில் சில்லறை பிரச்சினையையும் தீர்க்க முடியும்.