பெரியார் பல்கலையில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்


         பெரியார் பல்கலை தொலைநிலைக் கல்விக்கு அங்கீகாரம் இல்லாததால், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை, பல்கலை நிர்வாகம் நிறுத்தி உள்ளது.பெரியார்
பல்கலை தொலைநிலைக் கல்வியை வழங்கும், 'பிரைடு' அமைப்பு, 2001ம் ஆண்டு துவங்கப்பட்டது.

         இதில், 156 பாடத் திட்டங்களில், தமிழகத்தில், 210 மையங்களிலும்; பிற மாநிலங்களில், 70 மையங்களிலும்; வெளிநாடுகளில், ஆறு மையங்களிலும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில், 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
பல நிபந்தனைகள்
பல்கலை மானியக்குழு, கடந்த பல ஆண்டுகளாக, வெளிமாநிலங்களில் மையங்களோ, தொலைதுாரக் கல்வியோ வழங்குவதை நிறுத்த வேண்டும். தொழில்சார் பாடப் பிரிவுகள் தொலைநிலைக் கல்வியில் வழங்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகிறது.
இவற்றை பெரியார் பல்கலை பின்பற்றாததால், பல்கலை மானியக்குழு, 2014 - 15ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை வழங்கவில்லை. மேலும், 2015 ஆகஸ்ட், 27ம் தேதியிட்ட கடிதத்தில், 2015 - 16க்கான மாணவர் சேர்க்கையை நிறுத்துமாறு, அறிவுறுத்தியுள்ளது.
பல்கலை மானிய குழு
ஆனாலும், தொடர்ந்து தொலைநிலைக் கல்வியில் மாணவர் சேர்க்கையை நிறுத்தாமல், நடத்தி வந்ததால், பல்கலை மானியக்குழு, 'பெரியார் பல்கலை தொலைதுாரக் கல்வியில், மாணவர்
கள் சேர வேண்டாம்' என, 'பப்ளிக் நோட்டீஸ்' வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தற்போது பெரியார் பல்கலை தொலை நிலைக் கல்வியில், மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில், 25 ஆயிரம் மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றம் மூலம் தீர்வு
மாணவர் சேர்க்கை நிறுத்தம் குறித்து பெரியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் கூறியதாவது: பிற மாநிலங்களில் தொலைநிலைக் கல்வி திட்ட மையம் துவங்கக்கூடாது என, பல்கலை மானியக்குழு, கடந்த ஆண்டு அறிவுறுத்தியது. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும், பிற மாநிலங்களிலும் தொலைதுாரக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இது குறித்து ஆறு மாதத்துக்கு முன், நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தொலைதுாரக் கல்வித் திட்டத்தை தொடர உத்தரவு பெற்றுள்ளோம். தற்போது பெரியார் தொலைநிலைக் கல்வியில், மாணவர்கள் சேர வேண்டாம் என, பல்கலை மானியக்குழு
அறிவித்துள்ளது.
இதனால், தற்போது மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான பதில் கடிதம், மானியக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உரிய கால அவகாசத்துக்குள் அவர்கள் பதில் அளிக்காத நிலையில், நீதிமன்றம் மூலம் இதற்கு தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank