வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் அறிவிப்பு.

பி.எஸ்.என்.எல்., நிறுவனம், லேண்ட் லைன் மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளைஅறிவித்துள்ளது.இதுகுறித்து புதுச்சேரி பி.எஸ்.என்.எல்.,முதுநிலை பொது மேலாளர் லீலா சங்கரி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தனது லேண்ட் லைன் வாடிக்கையாளர்களுக்கு இலவச கால் வசதிகளை அதிகரித்துள்ளது. மிகச்சிறிய அளவிலான மாதாந்திர கட்டண உயர்வுடன் அமலாகும் இச்சலுகை, மே 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.ரூரல் ஜெனரல், அர்பன் ஜெனரல் மற்றும் ஒன் இந்தியா திட்டங்களுக்கு இச்சலுகை பொருந்தும்.மேலும், வரும் ஜூலை 29ம் தேதி வரையில், புதிய லேண்ட் லைன் (அ) புதிய பிராட்பேண்ட் (அ) புதிய பிராட்பேண்ட் காம்போ இணைப்பு பெறுவோருக்கு, பொருத்தும் கட்டணம் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.இணைப்பு துண்டிக்கப்பட்ட வாடிக்கையாளர்களும் இச்சலுகையை பயன்படுத்தி, இணைப்பை மீணடும் பெறலாம்.மாதாந்திர கட்டணம் ரூ. 700 அல்லது அதற்கு மேல் உள்ள பிராட்பேண்ட் புதிய இணைப்பு பெறும் வாடிக்கையாள்கள், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் வழங்கும் ஒய்-பி மோடத்தை வாங்கும்போது, மோடத்திற்கான கட்டணம், மாதம் ரூ. 100 வீதம் மாதாந்திர பில் தொகையில் குறைக்கப்படும். இந்த கேஷ் பேக் சலுகை வரும் ஜூன் 30 வரையில் புதிய இணைப்பு பெறுவோருக்கு வழங்கப்படும்.




மாத கட்டணம் ரூ. 600 முதல் ரூ. 999 வரையிலான புதிய பிராட்பேண்ட் இணைப்பை, ஆண்டு கண்ட்டன அடிப்படையில் பெறும் வாடிக்கயைாளர்களுக்கு ரூ. 500 என்ற சலுகை விலையில் மோடம் வழங்கப்படும். இச்சலுகை ஜூன் 30 வரையில் அமலில் இருக்கும்.சலுகைகள் சம்மந்தமாக மேலும் விபரங்களுக்கு, அருகில் உள்ள பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.




இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)