மருத்துவ நுழைவுத்தேர்வு சட்டத்தை ரத்து செய்யமுடியாது: உச்சநீதிமன்றம்
புது தில்லி:மருத்துவ நுழைவுத்தேர்வு சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.நடப்பு கல்வியாண்டில் மருத்து
வ நுழைவுத் தேர்வை ரத்து செய்து மத்திய அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்குத் தொடரப்பட்டது.
விசாரணையில், மருத்துவ நுழைவுத்தேர்வை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. சில மாநிலங்களுக்கு தற்கலிகமாக மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, இடைக்கால உத்தரவைபிறப்பித்தால் குழப்பங்கள் நேரிடலாம். எனவே மருத்துவ நுழைவுத்தேர்வு சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.