எம்.பார்ம்., - எம்.பி.டி., படிக்க ஆள் இல்லை
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,போன்ற மருத்துவப் படிப்புகள் படிக்க முடியாதோர், பி.பார்ம்., என்ற இளநிலை மருந்தாளுனர்; பி.பி.டி., எனப்படும், இளநிலை பிசியோதெரபி படிப்புகளில் சேர்கின்றனர். இந்த படிப்பை முடித்தோர், மு
துநிலை படிப்புகளான, எம்.பார்ம்., மற்றும் எம்.பி.டி., படிப்புகளில் சேர்ந்து படிக்க முடியும்.
இதற்கு, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பார்ம்., படிப்புக்கு, 58 இடங்களும், சுயநிதி கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ், 616 இடங்களும் உள்ளன. இதற்கான கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், 588 எம்.பார்ம்., இடங்கள், 98 எம்.பி.டி., இடங்கள் என, 686 இடங்கள் காலியாக உள்ளன.
இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:பி.பார்ம்., படித்ததும் வேலை கிடைத்து விடுகிறது; சுய தொழில் வாய்ப்பும் அதிகம் உள்ளதால், எம்.பார்ம்., படிக்க விரும்புவதில்லை. எம்.பி.டி., படிப்புகளுக்கும், சில ஆண்டுகளாக இதே நிலை தான் உள்ளது. இந்த பிரிவுகள் படிப்போருக்கு, அரசு வேலைவாய்ப்பு பெரிதாக இல்லாததும், ஒரு காரணம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.