ஓட்டுச்சாவடியில் அலைபேசியில் 'செல்பி' எடுக்க தடை
ஓட்டுச்சாவடியில் அலைபேசியில் 'செல்பி' எடுக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மீறினால் தண்டனைக்கு உள்ளாவார்கள் என, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.இன்று அலைபேசியில் 'செல்பி' எடுக்கும் மோகம்
வளர்ந்துவிட்டது. ஓட்டுச்சாவடிக்குள் ஓட்டளிக்
கும்போது, அலைபேசியில் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்பி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.வயதானவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் போன்றோரை உடனடியாக ஓட்டுச்சாவடிக்குள் அனுமதிக்க வேண்டும். ஓட்டுச்சாவடி இடத்தில் இருந்து 200 மீட்டர் துாரத்திற்குள் புகைப்பிடிக்கவும் தடை செய்யப்
பட்டுள்ளது.