உடம்பு எப்படி இருக்கிறது? - வாக்குச் சாவடி அலுவலர்களை சோதனை செய்ய புதியமுறை
தமிழக சட்டப்பேரவைத் தேர் தலை முன்னிட்டு தமிழ்நாடு முழு வதும் வாக்குச்சாவடி அதிகாரி களுக்கு கடந்த மாதம் 24-ம் தேதி பயிற்சி அளிக்கப்பட்டது.
அப் போது ஏராளமானோர் உடல் நிலையைக் காரணம் காட்டி தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கக் கோரினர். அவ்வாறு பயிற்சிக்கு வராதவர்களுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
முதல்கட்ட பயிற்சிக்கு வராதவர்களுக்கு கடந்த 2 நாட்களாக பயிற்சி அளிக் கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பயிற்சியின்போது உடல் நிலை சரியில்லை என்று சொல்லும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை மருத்துவர் குழு மூலம் பரிசோதிக்க தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டது. இப்புதிய முறை மூலம், உடல்நிலை சரியில்லை என்று சொன்னவர்களின் உடல் பரிசோதிக்கப்பட்டு உண்மை நிலை கண்டறியப்பட்டது.
இதுகுறித்து சென்னை எழும்பூர் (தனி) தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி வி.மாலதி கூறும்போது, “உடல்நிலை மோசமாக இருப்ப தால் தங்களால் தேர்தல் பணியில் ஈடுபட முடியாது என்று 7 பேர் தெரிவித்தனர். அவர்களின் உடலை மருத்துவர் குழு முழுமையாகப் பரிசோதித்து அறிக்கை அளித்தது. அதன்படி, மருத்துவ ரீதியான உடல் தகுதி இருந்த 5 பேரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நியாயமான காரணத்துக்காக இருவரின் கோரிக்கை மட்டும் ஏற்கப்பட்டது” என்றார்.