யு.ஜி.சி., நிதியை பயன்படுத்தாத தமிழக பல்கலைகளுக்கு சிக்கல்.


           சென்னை பல்கலை, அண்ணாமலை பல்கலை உள்ளிட்ட நான்கு பல்கலைக் கழகங்கள், நான்கு ஆண்டுகளாக, யு.ஜி.சி., யின் நிதியைபயன்படுத்தாதது தெரிய வந்துள்ளது.


            இதனால், வரும் ஆண்டுகளில் இந்த பல்கலைகளுக்கு மானியம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ், நாடு முழுவதும் பல பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன.

இவற்றில் மத்திய, மாநில அரசின் பல்கலைகளுக்கு, பல்வேறு திட்டங்களுக்காக, யு.ஜி.சி., யில் இருந்து ஆண்டுதோறும் நிதிஉதவி வழங்கப்படுகிறது.

ஆராய்ச்சி திட்டங்கள்:இந்த நிதியில், ஆராய்ச்சி படிப்புகள் துவங்க வேண்டும்; புதிய ஆராய்ச்சி திட்டங்கள் கொண்டு வர லாம்; புதிய பாடப்பிரிவுகளும் துவங்கலாம். இந்நிலையில், பல்கலைகளின் நிதி செலவீடு குறித்த அறிக்கையை, யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது. இதன்படி,தமிழகத்தில் உள்ள பல அரசு பல்கலைகள், யு.ஜி.சி., ஒதுக்கியநிதியை செலவு செய்யாதது தெரிய வந்துள்ளது.

அறிக்கை:சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கு, 7.76 கோடி; கோவை பாரதியார் பல்கலைக்கு, 5.97 கோடி; சென்னை பல்கலைக்கு, 10.88 கோடி; சேலம் பெரியார் பல்கலைக்கு, 5.06 கோடி ரூபாய் என, நான்கு ஆண்டுகளில் மொத்தம், 29.67கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை, பல்கலைகள்செலவு செய்யாததால் செலவு குறித்த அறிக்கையை வழங்கவில்லை.

அதே நேரம், காரைக்குடி அழகப்பா பல்கலை, சென்னை அண்ணா பல்கலை, திருச்சி பாரதிதாசன் பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, அன்னை தெரசா மகளிர் பல்கலை, தஞ்சை தமிழ் பல்கலை, அம்பேத்கர் சட்ட பல்கலை ஆகிய பல்கலைக்கழகங்கள், யு.ஜி.சி., நிதியை செலவு செய்து, 29.67 கோடி ரூபாய்க்கான செலவு அறிக்கையை தாக்கல் செய்துள்ளன.இந்த பல்கலைகளுக்கு மட்டும், வரும் கல்வியாண்டில் மானியம் வழங்க, யு.ஜி.சி., முடிவு செய்து உள்ளது. செலவு அறிக்கை தாக்கல் செய்யாத, நான்கு பல்கலைகளுக்கும் மானியம் நிறுத்தப்படும் என தெரிகிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)