மீன்வள பல்கலையில் பி.எப்.எஸ்சி., படிப்பு
'பி.எப்.எஸ்சி., என்ற மீன்வள தொழில்நுட்ப படிப்பில் சேர, ஜூன், 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு மீன்வள பல்கலை துணைவேந்தர் ரத்னகுமார்
தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து, அவர், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின், மீன்வள பல்கலை, நாகப்பட்டினத்தில் உள்ளது. பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது விலங்கியல் படித்து, 60 சதவீதத்திற்கு மேலான மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பி.எப்.எஸ்சி., எனப்படும் இளநிலை மீன் வள படிப்பில் சேரலாம். 110 இடங்கள் உள்ளன.அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் வினியோகம் இல்லை. விண்ணப்பங்களை, www.tnfu.ac.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, ஜூன், 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தவிர, இரண்டு ஆண்டு முதுகலை படிப்பான, எம்.எப்.எஸ்சி., மற்றும் பிஎச்.டி., படிப்புகளும் பல்கலையில் உள்ளன.இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.