FIR Copy 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் வெளியிடக்கோரி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
FIR Copy 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் வெளியிடக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முத
ல் தகவல் அறிக்கைகளை 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் வெளியிடக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
புது தில்லி: காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் வெளியிடக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த "இந்திய இளைஞர் வழக்குரைஞர் சங்கம்' சார்பாக பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த பொது நல மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
முதல் தகவல் அறிக்கை என்பது பொது ஆவணமாகும். ஆனால், காவல் நிலையத்தில் இருந்து முதல் தகவல் அறிக்கையின் நகலை பொது மக்கள் பெறுவது என்பது மிகவும் கடினமான காரியமாக உள்ளது. ஆகையால், காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்போது, பொது நலன் கருதி அதை காவல்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். அப்படி வெளியிடப்பட்டால், பொது மக்கள் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்காது.
எனவே, காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நேரத்தில் இருந்து 24 மணி நேரத்தில் அதை காவல்துறையின் இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும் என்று அந்த பொது நல மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த பொது நல மனு குறித்து பதில் அளிக்கக்கோரி, மத்திய அரசுக்கும், மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பக்கோரி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.