Why MBBS Application Sales Date Postponed?


          பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியாவதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தள்ளி போகிறது: மருத்துவக் கல்வி இயக்குநர் அறிவிப்பு.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தாமத மாக வெளியாவதாலும், தேசியதகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய் யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு வெளியாவ
தாலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் அறிவிக்கப் பட்டபடி நாளை தொடங்காமல் தள்ளிப் போவதாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர்.விமலா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,655 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 398 இடங்கள்(15 சத வீதம்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 2,257 இடங்கள் (85 சதவீதம்) மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு இருக்கின்றன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 85 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ளன.இவை தவிர சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில், 65 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன. அதேபோல் 8 தனியார் (சுயநிதி) மருத்துவ கல்லூரிகளில் உள்ள 1,010 எம்பிபிஎஸ் இடங்களில், 595 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக் கப்படுகின்றன. 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 1,610 பிடிஎஸ் இடங்களில், 970 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில் 2016-2017-ம் கல்வி
ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் மே மாதம் 9-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) கடந்த மாதம் அறிவித்திருந்தது.இந்நிலையில் நாடுமுழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கடந்த 1-ம் தேதி நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஜூலை 24-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன.இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக் கவுன் சில் (எம்சிஐ) பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு கல்லூரி களில் இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு இல்லாமல், கலந்தாய்வு முறையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று இந்திய மருத் துவக் கவுன்சில் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக் கின் முடிவுகள் வரும் 9-ம் தேதி (நாளை) அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

விண்ணப்ப விநியோகம்

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண் ணப்ப விநியோகம் மே 9-ம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக் கப்பட்டிருந்த நிலையில், அன்றை தினம்தான் வழக்கின் தீர்ப்பும் வெளி யாக உள்ளது. மேலும் பிளஸ்-2 தேர்வு முடிவு வரும் 17-ம் தேதிதான் வெளியாகிறது. அதனால் 9-ம் தேதி (நாளை) தொடங்க இருந்த விண்ணப்ப விநியோகம் தள்ளிப்போகிறது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் ஆர்.விமலாவிடம் கேட்ட போது, “பிளஸ்-2 தேர்வு முடிவு மே முதல் வாரத்தில் வெளியாகிவிடும் என்று நினைத்து, மே 9-ம் தேதி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடங் கும் என்று அறிவித்தோம். தற் போது வரும் 17-ம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்ப விநியோகமும் தள்ளிப் போகிறது. எப்போது விண்ணப்ப விநியோகம் என்பது முறைப்படி தெரிவிக்கப்படும்” என்றார்.

கடந்த ஆண்டு

கடந்த ஆண்டு மே 7-ம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதையடுத்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கானவிண் ணப்ப விநியோகம் மே 11-ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு காலதாமதமாக மே 17-ம் தேதி பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியா வதால், எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்ப விநியோகம் தள்ளிப் போகிறது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022