குரூப் 1 மெயின் தேர்வு முடிவு 17-ல் வெளியாக வாய்ப்பு.

தேர்வு நடைபெற்று முடிந்து ஓராண்டு ஆகியும் முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ள குரூப் 1 மெயின் தேர்வு முடிவு 17-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5, 6, 7 ஆகிய தேதிகளில் துணை ஆட்சியர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், உதவி வணிக வரித்துறை ஆணையர்கள், மாவட்ட பதிவாளர்கள் உள்ளிட்ட 79 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 1 மெயின் தேர்வு நடைபெற்றது.
குரூப் 1 மெயின் தேர்வை எழுதுவதற்காக 4, 282 பேர் தகுதிபெற்றிருந்த நிலையில் 3,450 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். சென்னையில் மட்டும் 43 மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்து ஓராண்டு ஆகியும் முடிவுகள்வெளியிடப்படாமல் இருந்து வருகிறது.இந்நிலையில், குரூப்-1 மெயின் தேர்வு முடிவு 17-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)