கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை

கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை: மத்திய அரசு அனுமதி.
தமிழக அரசு ஏற்று நடத்தும் கோயம் புத்தூர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 2016 - 17ம் கல்வி ஆண்டில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு
அனுமதி வழங்கியுள்ளது.கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, இந்த மருத்துவக் கல்லூரியை தமிழக அரசு ஏற்று நடத்த கடந்த ஆண்டு முடிவு செய்தது. அதன்படி 2016-17-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கும் தமிழக அரசு விண்ணப்பித்து இருந்தது. இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) மருத்துவ மனையை ஆய்வு செய்து அறிக்கையை மத்திய அரசுக்குசமர்ப்பித்தது. இதைய டுத்து இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2016-17-ம் ஆண்டில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித் துள்ளது. 

இந்த கல்லூரியின் 100 எம்பிபிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் போக,மீத முள்ள 85 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இவற்றில் 20 இடங்களை இஎஸ்ஐ பணியாளர்களின் குழந்தை களுக்கு ஒதுக்க தமிழக அரசு திட்டமிட் டுள்ளது.இவை தவிர சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் மற்றும் இஎஸ்ஐ பணியாளர்களின் குழந்தைகளுக்கு 20 இடங்கள் போக மீதமுள்ள65 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. 

சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் போக, மீதமுள்ள 85 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ளன. 6 தனியார் (சுயநிதி) மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 760 எம்பிபிஎஸ் இடங்களில் மாநில அரசுக்கு 470 இடங்கள் உள்ளன. 17 தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,610 பிடிஎஸ் இடங்களில், 970 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank