ஜிப்மர் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 17க்கு ஒத்தி வைப்பு.


       தொழில்நுட்ப காரணங்களால் ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் எஜூகேஷன் அன்ட் ரிசர்ச் (JIPMER) நடத்தும் எம்.பி.பி.எஸ் தேர்வு முடிவுகள் ஜூன் 17-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.முன்னதாக ஜிப்மர் நுழைவுத்தேர்வு மு
டிவுகள் ஜூன் 15-க்குள் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால்தவிர்க்கமுடியாத தொழில்நுட்ப காரணங்களால் தேர்வு முடிவுகள் ஜூன் 17-ம் தேதி வெளியிடப்படும் என்று கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத்தேர்வு, இந்தாண்டு 200 இடங்கள் ஒதுக்கியுள்ளது. 

இந்நிலையில், கடந்த ஜூன் 5-ம் தேதி நாடு முழுவதும் 75 நகரங்களில் 275 மையங்களில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கு 1.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)