பள்ளிக்குழந்தைகளை பக்குவமாக வளர்க்க 18 ஆலோசனைகள்!

" அப்பாடி...இத்தனைநாள்இந்தபிள்ளைங்களைவீட்டுலவைச்சுகிட்டுநாங்கபட்டப்பாடுஇருக்கே....இனிமே3மணிநேரம்கொஞ்சம்ஃப்ரீயாஇருக்கலாம்"என்றுபெருமூச்சுவிடும்கே.ஜிபெற்றோராநீங்கள்? இந்தவயதில்தான்உங்கள்செல்லங்களின்ஒவ்வொருஅசைவும்உங்களுக்கு

மிகமுக்கியமானது.
அவர்களிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும்என்பதைஉங்களுக்குசொல்கிறார்சென்னையைச்சேர்ந்தகுழந்தைகள்நலமருத்துவர்யமுனா.
1.என்னகாரணம்சொன்னாலும்காலையில்வயிற்றுக்குசாப்பாடுகொடுத்தபிறகேபிள்ளைகளைபள்ளிக்குஅனுப்புங்கள்.காலைஉணவைதவிர்க்கவிடவேக்கூடாது.
2) படுக்கையைவிட்டுஎழுந்ததும், 'ஸ்கூல்கெளம்பு... நேரமாச்சு'என்றுபடுத்தாமல்,அவர்களுக்குவிரும்பியதைஅரைமணிநேரம்செய்யவிட்டு,பிறகுஅன்றாடபழக்கவழக்கங்களைமுடித்துவிட்டுபள்ளிக்குஅனுப்பினால்தான்ஸ்கூல்போகிறமனநிலைவரும்.
3) ஒரு நாள்அம்மா,ஒருநாள்அப்பாஎன்றுபெற்றோர்இருவரும்ஒருநாள்விட்டுஒருநாள்குழந்தையைபள்ளிக்குதயார்செய்துஅனுப்புங்கள்.அப்போதுதான்யார்இருந்தாலும்இல்லாவிட்டாலும்குழந்தைஅழாமல்சமர்த்தாகஸ்கூல்கிளம்புவார்கள்.
4) ''இவளோலேட்டாஎழுந்திரி, வேன்போயிடும்", ''போபோய்மிஸ்கிட்டஅடிவாங்கு"என்றுகாலையில்சுப்ரபாதம்பாடிஎழுப்பாமல், ''சீக்கிரம்எழுந்தாஉன்ஸ்கூல்ஃப்ரெண்ட்ஸ்கூடபோய்கிளாஸ்ஆரம்பிக்கிறவரைக்கும்ஜாலியாவிளையாடலாம்ல"என்றுபாசிட்டிவாகபேசுங்கள்.
5)கேஜிமுதல்3ம்வகுப்புக்குள்படிக்கின்றகுழந்தைகளிடம்,இந்தவயதிலேயேமதிப்பெண்களைஎதிர்பார்க்கக்கூடாது.அதற்குபதில்அவர்கள்படிப்பைஎப்படி புரிந்துகொள்கிறார்கள்என்பதில்மட்டும்கவனம்செலுத்துங்கள்.
6) புதியசூழ்நிலைக்குத்தயாராவதுஎப்படி?புதியநபர்களிடம்எப்படிப்பழகவேண்டும்,நண்பர்களைஎப்படிஅமைத்துக்கொள்ளவேண்டும்என்பதுகுறித்து, அந்தந்த சூழ்நிலைகளில்அவர்களுக்குஎடுத்துச்சொல்லிபுரியவையுங்கள்.
7)எந்தப்பள்ளிக்கூடமும்நூறுசதவிகிதம்சிறந்ததுகிடையாது.எனவேகுழந்தைகள்முன்பாகஅவர்கள்படிக்கும்பள்ளிக்கூடத்தைத்தரக்குறைவாகப்பேசக்கூடாது.அப்படிபேசும்பட்சத்தில்குழந்தைகளுக்குப்பள்ளியின்மீதுஉள்ளஈர்ப்புக்குறையத்தொடங்கி,படிப்புமீதேவெறுப்புஏற்படும்.
8) ''ஹோம்ஒர்க்பண்ணவர்றியாஇல்லியா...?முதல்லஉன்கையெழுத்தைமாத்து"என்றுஎப்போதும்மிலிட்ரிகமாண்டராகஇருக்காமல்''டேய்இன்னிக்குஎன்னஹோம்வொர்க்...?வாவாஓடிவாபார்க்கலாம்"என்றுசின்னசுவாரஸ்யத்தைகூட்டுங்கள்.இந்தவயசுலஹோம்வொர்க்எல்லாம்எதுக்குஎன்றுஅசால்டாகவும்இருக்கக்கூடாது.அவர்களுடன்நீங்கள்உட்காரும்பட்சத்தில்வளரும்போதுஅவர்களாகவேஹோம்வொர்க்கைமுடித்துவிடுவார்கள்.


9)தினமும்மாலைவீட்டுக்குவந்ததுமேபடிஎன்றுசொல்லாமல்,கொஞ்சநேரமாவதுவிளையாடவிடுங்கள்.அப்போதுதான் அவர்களால் படிப்பில்கவனம்செலுத்தமுடியும்.
10)இந்தவயதில்மோஷன்போறதுலபிரச்னைஇருக்கத்தான்செய்யும்.எனவேகுழந்தைஸ்கூலில்மோஷன்போய்விட்டால்திட்டாதீரக்ள்.அதேபோல்மோஷன்போறதில்பிரச்னைகள் இருந்தால் அதை பள்ளியில் தெரிவித்துவிடுங்கள்.
11) குழந்தைப்பருவத்தில்ஜலதோசம்,இஃன்பெக்ஷன்,அனீமியாஇதெல்லாம்வருவதுசகஜம்தான்.எனவேமாதாமாதம்உடம்பைசெக்பண்ணுங்கள்.சின்னக்குழந்தைக்குஒருவருடத்தில்6-7முறைஉடல்நிலைபாதிக்கப்படுவதுஇயல்பானது.உடம்புசரியில்லாதபட்சத்தில்,குழந்தைகளைஸ்கூலுக்கு100%அட்டென்டென்ஸுக்காகஅனுப்பக்கூடாது.
12) ''அம்மாஅந்தப்பையன்என்னைக்கடிச்சிட்டான்,அடிச்சிட்டான்"அப்படின்னுகுழந்தைசொல்லும்போது,உடனே"நீஏதாவதுபண்ணுனியா..?"அப்படின்னுகேட்கக்கூடாது.பதிலா"அதுக்குமுன்னாடிஎன்னநடந்தது...?"அப்படின்னுகேட்கணும்.அப்பதான்குழந்தைங்கஉண்மையைசொல்வார்கள்.
13 )மதியச்சாப்பாட்டுதொடர்ந்துதிரும்பஅப்படியேவருகிறதுஎன்றால் அவர்களுக்கு பிடித்த சாப்பாட்டைகொடுத்தனுப்புங்கள்.அதைவிடுத்துநீங்கள்செய்வதைத்தான்சாப்பிடவேண்டுமென்றுகமாண்ட்செய்யாதீர்கள்.
14) தினமும் பள்ளி முடிந்து வந்ததும் அன்றுஎன்ன நடந்தது என்று கேளுங்கள்.அப்புறம்கேட்டுக்கலாம் என்றால்,அவர்களுக்கு மறந்துபோய்விடும்.வெளிப்படையாகபேசினால்மட்டுமேஎல்லாவற்றையும்தெரிந்துகொள்ளமுடியும்.
15)சின்னசின்னஎமோஷன்களுக்குபதிலளியுங்கள்.அப்போதுதான்பென்சில்காணாமல்போனதிலிருந்துமனக்காயம்வரைஎல்லாவற்றையும்சொல்வார்கள்.

16) "ஸ்கூல்லடீச்சர்திட்டிட்டாங்க..."ன்னுவந்துசொன்னா, "கவலைப்படாதசரியாகிடும்,நான்கூடஇருக்கே"ன்னுசொல்லணும்.நீங்களும்சேர்ந்துதிட்டுனா,அவங்கஉங்ககிட்டஎதுவுமேஷேர்பண்ணிக்கமாட்டாங்க.
17) பிரச்னைஎன்றுஅழுதால்,உடனேஅவர்களுக்குபிடித்தபொருளைகொடுத்துசமாதானப்படுத்தாதீர்கள்.பிறகுஎல்லாபிரச்னைகளுக்கும்எதையாவதுஒன்றைநீங்கள்தரவேண்டியதுஇருக்கும்.
18)அவர்கள்முன்னால்நீண்டநேரம்சீரியல்பார்ப்பது,அவர்களைதிட்டுவது,அவர்கள்முன்னால்ஸ்மார்ட்போனைசதாபார்த்துக்கொண்டேஇருந்தால்அவர்களும்அதைதிரும்பச்செய்வார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
-தொகுப்பு: லோ.சியாம்சுந்தர்(மாணவப்பத்திரிகையாளர்)

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)