மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்.18 ல் நடக்கிறது


            மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்.,18ல் நடக்கிறது. ஜூலை 18 வரை 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி.,) தெரிவித்துள்ளது.


            இதில் தேர்ச்சி பெறுவோர் கேந்திரிய வித்யாலயா, நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை கற்பிக்க முடியும். ஒன்று முதல் 5 ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிய முதல் தாளையும், ஆறு முதல் 8 ம் வகுப்புக்கு 2ம் தாளையும் எழுத வேண்டும். ஒருவரே இரு தாள்களையும் எழுதலாம். முதல்தாள் எழுத பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் 2 ஆண்டு தொடக்க கல்வி பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இரண்டாம் தாள் எழுத பட்டப்படிப்புடன் 2 ஆண்டு தொடக்க கல்வி பட்டயப்படிப்பு அல்லது பி.எட்., முடித்திருக்க வேண்டும். ஓ.பி.சி., பிரிவினர் ஒரு தாள் மட்டும் எழுத ரூ.600, இரு தாள்களை
எழுத ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
எஸ்.சி.,-எஸ்.டி.,- மாற்றுத்திறனாளிகள் ஒரு தாளுக்கு ரூ.300, இரு தாள்களுக்கு ரூ.500 செலுத்த வேண்டும். விபரங்களுக்கு www.ctet.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
செப்., 18 காலை 9:30 முதல் பகல் 12 மணி வரை 2 ம் தாள், பகல் 2 முதல் மாலை 4:30 மணி வரை முதல் தாளுக்கான தேர்வு நடக்கும். தகுதித் தேர்வுக்கு 'ஆன்லை-னில்' நேற்று முன்தினம் (ஜூன் 22) முதல் ஜூலை 18 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை ஜூலை 19 க்குள் செலுத்த வேண்டும். ஆக., 17ல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம், என, மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)