கல்வி கட்டண கமிட்டி பிரச்னை 2,000 பள்ளிகள் தவிப்பு


கல்வி கட்டண கமிட்டிக்கு தலைவர் இல்லாததால், 2,000 சிறிய பள்ளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதியை உயர்த்திய நிலையில், பழைய கட்டணத்தில், ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.


கடந்த, 2009ல், கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்ததும், நீதிமன்ற உத்தரவின் படி, சுயநிதி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டியை, தமிழக அரசு அமைத்தது.
தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி, இட அளவு, விளையாட்டு மைதானம், வகுப்பறை வசதி, ஆசிரியர் எண்ணிக்கை போன்றவற்றை ஆய்வு செய்து, கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

கல்வி கட்டண கமிட்டி தலைவராக இருந்த நீதிபதி சிங்காரவேலு, 7,500 பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு கட்டண நிர்ணயம் செய்து அரசிடம் சமர்ப்பித்தார். ஆறு மாதங்களுக்கு முன், அவர் ஓய்வு பெற்றார். அதனால், தற்போது, 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, புதிய உள்கட்டமைப்பு வசதிகளின் படி, கட்டண நிர்ணயம் செய்யப்படவில்லை.
இது தொடர்பாக தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கம் சார்பில், தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

அதன் விவரம்: கல்வி கட்டண கமிட்டி தலைவர் ஓய்வு பெற்றதால், புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்காமல், 2,000 பள்ளி கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், எங்கள் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.எனவே, உள்கட்டமைப்பு படி, 25 சதவீதம் கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், பெற்றோர் ஏற்றுக் கொள்ளாமல், பழைய கல்வி கட்டண பட்டியலை காட்டுகின்றனர்.

அதனால், பள்ளிகளுக்கும், பெற்றோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதற்கு முடிவு கட்டும் வகை யில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, கல்வி கட்டண கமிட்டியை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகிகள் கூறும்போது, 'கட்டண கமிட்டி நிர்ணயம் செய்த பழைய கட்டணப்படி, ஆசிரியர்களுக்கு சரியான சம்பளம் வழங்க முடியவில்லை; பெற்றோரிடமும் உரிய கட்டணம் பெற முடியவில்லை. எனவே, கட்டண கமிட்டியால் எங்களுக்கு பிரச்னை தான் அதிகரித்துள்ளது. இப்படியே போனால், பள்ளியை நடத்த முடியாத சூழல் ஏற்படும்' என்றனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank